மெக்சிக்கோவில் தீவிபத்து ; 23 பேர் உயிரிழப்பு
மெக்சிக்கோவில் கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 23 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
சோனோரா மாநிலத்தின் தலைநகரான ஹெர்மோசில்லோ நகர மையத்தில் நேற்று முன்தினம் (1) இந்த தீ விபத்து ஏற்பட்டது.
காயமடைந்தவர்கள் ஹெர்மோசில்லோவில் உள்ள ஆறு வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளில் “நச்சு வாயுக்களை உள்ளிழுத்ததால்” இறப்புகள் ஏற்பட்டதாக ஆளுனர் கூறியுள்ளார்.
தீ விபத்து தொடர்பான காரணங்களை கண்டறிய அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.