;
Athirady Tamil News

மத்தியபிரதேசத்தில் மாயமான சிறுமி 2 மாதங்களுக்குப்பின் பாகிஸ்தான் எல்லையில் மீட்பு

0

ஜெய்ப்பூர்,

மத்தியபிரதேச மாநிலம் குனா மாவட்டம் மக்சோடங்கர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த செப்டம்பர் 8ம் தேதி இரவு வீட்டில் இருந்து மாயமானார். இது குறித்து சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், காணாமல் போன, கடத்தப்பட்ட, மாயமான குழந்தைகளை தேடி கண்டுபிடிக்கும் வகையில் மாநில அரசுகளின் ஒருங்கிணப்புடன் மத்திய உள்துறை அமைச்சகம் ஆபரேஷன் முஸ்கன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டப்படி பல்வேறு மாநில அரசுகள் இணைந்து பல்வேறு வழக்குகள் தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் மத்தியபிரதேச போலீசாருடன், பஞ்சாப் போலீசார் இணைந்து நடத்திய விசாரணையில் மத்தியபிரதேசத்தில் 2 மாதங்களுக்குமுன் வீட்டில் இருந்து வெளியேறிய சிறுமி ராஜஸ்தான் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ள ஜெய்சல்மார் மாவட்டத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை மீட்ட மத்தியபிரதேச போலீசார் அவரை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.