பாணந்துறை தொழிற்சாலையொன்றில் தீ விபத்து
பாணந்துறை – ஹிரன பகுதியில் இன்று (24) பகல் தொழிற்சாலையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயை அணைக்க 7 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மொரட்டுவை தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சேத விபரங்கள் பற்றிய தகவல்கள் மற்றும் தீ விபத்துக்கான காரணங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.