தென்மராட்சியில் மாவீரர்களுக்கு அஞ்சலி
மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வும் , மாவீரர்களின் பெற்றோர் , உரித்துடையோருக்கான கௌரவிப்பு நிகழ்வும் தென்மராட்சியில் நடைபெற்றது.
தென்மராட்சியில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் , ஈகை சுடர் ஏற்றி , மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மாவீரர்களின் நினைவாக மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது
நிகழ்வில், பிரதேச சபை, நகரசபை உறுப்பினர்கள், மதத்தலைவர்கள், மாவீரர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



