தென்மராட்சி பிரதேச வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன
மாவீரர் தினத்தினை முன்னிட்டு யாழ். தென்மராட்சி பிரதேச வர்த்தக நிலையங்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை முழுமையாக மூடப்பட்டுள்ளன.
தென்மராட்சி பிரதேசத்தின் சாவகச்சேரி,கைதடி மற்றும் கொடிகாமம் ஆகியவற்றின் சந்தைகள்,இறைச்சிக் கடைகள்,மீன்சந்தைகள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்கள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டுள்ளன.






