;
Athirady Tamil News

வெள்ளத்தில் சிக்கிய யாழ் பேருந்திலிருந்த இளைஞனைக் காணவில்லை ; கதறும் குடும்பம்

0

கலா ஓயாவில் சிக்குண்ட யாழிலிருந்து சென்ற இளைஞனைக் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்தில் சென்று கலா ஓயாவில் சிக்குண்டு வீட்டுக் கூரையிலிருந்து மீட்கப்பட்டவர்களில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது.

வெள்ளப்பெருக்கால் மாயம்
தனியார் நிறுவனம் ஒன்றின் யாழ்ப்பாண கிளையில் வாடிக்கையாளர் முகாமையாளராக பணிபுபவரே வெள்ளப்பெருக்கால் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்த பேருந்து கலாஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிகொண்டது.

அப் பேருந்தில் பயணம் செய்த 69 பேர் அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு இடையிலான கலாஓயா பகுதியில் பாதுகாப்பாக கூரையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நொச்சிகாமம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.