வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணிப் பெண்; இந்திய விமானப் படையினரின் உதவியுடன் மீட்பு
கொத்மலை பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
இதன் போது காயமடைந்த இருவர் உட்பட வெளிநாட்டவர்கள் அடங்கலாக 24 பேரை இந்திய விமானப் படையினரின் உதவியுடன் மீட்புக் குழுவினர் மீட்டு பாதுகாப்பாக கொழும்புக்கு கொண்டுசென்றுள்ளனர்.
இன்று (30) இந்திய அரசினால் மீட்புப் பணிகளுக்காக வழங்கப்பட்ட இந்திய விமானப்படையின் MI 17 (Indian Ac) ஹெலிக்கொப்டர் மூலம் இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.