;
Athirady Tamil News

120 அடி உயரத்தில் ஸ்கை டைனிங்கில் சிக்கிய சுற்றுலா பயணிகள் – நடுங்கவைக்கும் சம்பவம்

0

சுற்றுலா பயணிகள் 2 மணி நேரத்திற்கு மேலாக அந்தரத்தில் சிக்கி தவித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

ஸ்கை டைனிங்
மூணாறு அருகே அனச்சல் பகுதியில் ஸ்கை டைனிங் (Sky Dining) என்கிற உணவகம் சமீபத்தில் திறக்கப்பட்டது. கிரேன் மூலம் 120 அடி உயரத்தில் நிலை நிறுத்தப்பட்ட கூண்டில், உணவு அருந்தலாம்.

ஒரே நேரத்தில் 16 பேர் வரை அங்கு உணவருந்த முடியும். இங்கு கண்ணூர் மாவட்டத்தில் இருந்து 5 சுற்றுலா பயணிகள் அந்த உணவகத்திற்கு சென்றுள்ளனர். உணவு சாப்பிட சென்றவர்கள் கீழே இறங்க முடியாமல், 120 அடி அந்தரத்தில் சிக்கி தவித்துள்ளனர்.

கிரேனின் ஹைட்ராலிக் தொழில்நுட்பம் திடீரென்று பழுதானதால், கீழே இறக்க முடியவில்லை என்று ஆபரேட்டர் கூறியுள்ளார். இதனால் சுற்றுலா பயணிகள் 5 பேர் மற்றும் அந்த உணவகத்தின் ஊழியர் ஒருவர் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக உணவகத்தில் சிக்கி தவித்துள்ளனர்.

பத்திரமாக மீட்பு
தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் சிறிது நேரத்திலேயே சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பின் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மீட்புக்குழுவினரும் சம்பவ இடத்திற்கு சென்று சுற்றுலா பயணிகள் மற்றும் உணவகத்தின் பெண் ஊழியர் உள்ளிட்ட அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட தனியார் உணவகம் தீயணைப்புத்துறை மற்றும் மீட்புக் குழுவிற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை என்றும்,

அருகில் உள்ள மக்கள் அளித்த தகவல் அடிப்படையில் ஊடகங்களில் செய்தி வெளியாகி அதைப் பார்த்து அரசு கவனத்திற்கு சென்றது தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.