யாழ். சண்டிலிப்பாயில் முச்சக்கர வண்டி மோதியதில் வயோதிப பெண் பலி
யாழில் விபத்தில் சிக்கி வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மானிப்பாய் காவல் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரிக்கு முன்பாக நேற்று (18) விபத்து சம்பவித்துள்ளது.
சண்டிலிப்பாய் மத்தியைச் சேர்ந்த செல்லத்துரை மனோன்மணி (வயது 80) என்பவரே இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
மானிப்பாய் பொலிஸார் விசாரணை
குறித்த பெண் வீதியில் நடந்து சென்றுகொண்டு இருந்தார். இதன்போது வீதியில் வேகமாக வந்த முச்சக்கர வண்டி அவர்மீது மோதியதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்நிலையில் சிகிச்சைக்காக சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை இடையிலேயே அவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது சடலம் தற்போது சங்கானை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் குறித்து விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.