போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது
காலி – பெந்தோட்டை பகுதியில், ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
சந்தேகநபர்களிடமிருந்து 05 கிலோகிராம் 105 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் 40 மற்றும் 45 வயதுடையவர்கள் எனவும் பெந்தோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.