;
Athirady Tamil News

அமெரிக்கா தரைவழி தாக்குதல் நடத்தினால் எதிர்கொள்ள தயார்: ஈரான் அறிவிப்பு

0

துபாய்,

ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் ஒரு மாதத்தை எட்டியுள்ளது. போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் பேச்சுவார்த்தையை தொடங்கி இருக் கின்றன. அதேநேரம் இரு தரப்புக்கு இடையேயான தாக்குதல்களும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன.

ஈரானின் உள்கட்டமைப்புகள் மற்றும் முக்கிய தளங்களை ஏவுகணைகள் மற்றும் டிரோன்களால் தாக்கி வரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படை கள், விமானங்கள் மூலமும் குண்டுவீசி வருகின்றன.இதில் அடுத்தகட்டமாக ஈரானில் தரைவழி தாக்குதலுக்கு அமெரிக்கா திட் டமிட்டு உள்ளது. குறிப்பாக வீரர்களை ஈரானுக்குள் ஊடுருவ வைத்து அதன் முக்கிய பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அமெரிக்கா நடவடிக்கை எடுத்து உள்ளது.இதற்காக சுமார் 3,500 கூடுதல் வீரர்களை வளைகுடா பிராந்தியத்துக்கு அனுப்பி உள்ளது.

இந்த வீரர்கள் ஈரானை ஒட்டிய பகுதிகளை அடைந்து விட்டனர். இதில் 1,000 பேர் விமானத்தில் இருந்து குதித்து அந்த பகுதி களை அதிரடியாக கட்டுப்பாட்டுக்குள் எடுக்கும் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.இவ்வாறு ஈரானில் தரைவழி தாக்குதல் தொடங்கினால் அது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

ஆனால் அமெரிக்க படைகள் ஈரான் மண்ணில் இறங்கினால், அவர்களுக்கும், அவர்களின் கூட்டாளிகளுக்கும் தகுந்த பதிலடி வழங்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்து உள்ளது. ஈரானின் எச்சரிக்கையால் மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.