7 ஆண்டுகளுக்கு பிறகு தூதரகம் திறப்பு வெனிசுலாவுக்கு சென்ற அமெரிக்கா தூதர்
போதை பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் கைது செய்து அழைத்து சென்றது. இதையடுத்து அங்கு இடைக்கால அழைத்து சென்றது. இதையடுத்து, அதிபராக நியமிக்கப்பட்ட டெல்சி ரோட்ரிக்ஸ் அரசாங்கம் அமெரிக்காவுடன் இணக்கமாக உள்ளது.
‘இந்த நிலையில் வெனிசுலாவில் 7 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா தூதரகம் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அமெரிக்க தூதர் லாரா டோகு வெனிசுலாவுக்கு சென்றார். அவர் வெனிசுலாவில் அமெரிக்க தூதரகத்தை திறப்பதற்காக அங்கு சென்றடைந்தார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில், நானும் எனது குழுவும் பணியாற்றத் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்காவும் வெனிசுலாவும் தூதரக உறவுகளைத் துண்டித்து, தங்கள் தூதரகங்களை மூடின என்பது குறிப்பிடத்தக்கது.