;
Athirady Tamil News

லண்டனில் பகீர் சம்பவம்; தாலி கொடி உள்ளிட்ட பல நகைகளை பறிகொடுத்த தமிழ் குடும்பம்!

0

லண்டனில் பட்டப்பகலில் தமிழ் குடும்பம் ஒன்றின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பெருமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

புஷி பகுதியில் உள்ள சில்ரன் அவென்யூவில் (Silton Avenue) குடியிருப்பு பகுதியில் கடந்த 18 ஆம் தேதி மாலை 4:30 மணி முதல் 4:50 மணிக்கும் இடைப்பட்ட குறுகிய காலப்பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.

அவதானம் மக்களே…
வீட்டின் பின்புற கண்ணாடி கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், வீடு முழுவதும் தேடுதல் நடத்திப் பெறுமதியான நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் தாலிக்கொடி உட்படப் பல முக்கிய தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ஹேட்ஸ்மியர் (Hertsmere) குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரி சார்லோட் ஹார்ட்லி (Charlotte Hartley) இது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகிறதாக கூறப்படுகின்றது.

சம்பவம் நடந்த நேரத்தில் அந்தப் பகுதியில் ஒரு நபர் நடந்து சென்றதை அவதானித்துள்ளனர். சந்தேக நபர் வீட்டை விட்டு வெளியேறுவதை அவர் பார்த்திருக்கலாம் என நம்பப்படுவதால், அந்த நபர் அல்லது தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் லண்டனில் வீட்டுக்குள புகுந்து கொள்லயிட்ட சம்பவம் அப்பகுதி தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.