;
Athirady Tamil News

வட பிரிட்டிஷ் கொலம்பியாவில் பனிச்சரிவு விபத்துகள்: 4 பேர் பலி

0

கனடாவின் வடக்கு பிரிட்டிஷ் கொலம்பிய பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இரண்டு தனித்தனி பனிச்சரிவு விபத்துகளில் மொத்தம் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

மவுன்ட் கனுஸ் பகுதியில் பிற்பகல் 1.28 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Iridium Shoulder” எனப்படும் ஸ்கி பாதையில் ஹெலி-ஸ்கீயிங் செய்து கொண்டிருந்த நால்வர் பனிச்சரிவில் சிக்கியதாக தகவல் கிடைத்ததாக தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு தேடுதல் மற்றும் மீட்பு குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டன.

இதில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது. மேலும் ஒருவர் தீவிர காயங்களுடன் ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

இதற்கு சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு, பிளசன்ட் கேம்ப் அருகே மற்றொரு பனிச்சரிவு ஏற்பட்டதாக தகவல் கிடைதத்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், ஒருவர் மயக்க நிலையில் இருந்த நிலையில், மற்றவர்கள் அவருக்கு உயிர் காப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, Atlin தேடுதல் மற்றும் மீட்பு குழுவினருடன் இணைந்து போலீசார் ஹெலிகாப்டர் மூலம் சுமார் 150 கிலோமீட்டர் தூரம் உள்ள சம்பவ இடத்துக்கு சென்றனர்.

அங்கு சென்றபோது, ஒருவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. மொத்தம் ஐந்து பேர் மீட்கப்பட்ட நிலையில், நான்கு பேர் காயமின்றி உயிர் தப்பினர். இரண்டு சம்பவங்களும் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.