;
Athirady Tamil News

மட்டக்களப்பு பாழடைந்த கிணறு விவகாரம்; வேலையில்லாது சொத்து கொள்வனவு ….விசாரணை வளையத்துள் உறவினர்கள்!

0

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காடு வயல் பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண்ணொருவர் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் அந்த சம்பவத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவினர்கள் தொடர்பாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் விசாரணை அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது.

உறவினர்கள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள்
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 3 சந்தேகநபர்களின் உறவினர்கள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாக விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

குறிப்பாக, சந்தேக நபர்களின் உறவினர்கள் சிலர் எந்தவித பணிகளுக்கும் செல்லாது சொத்துக்களைக் கொள்வனவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய, முச்சக்கர வண்டி மற்றும் வீடுகளைக் கொள்வனவு செய்வதற்கு அவர்கள் முயற்சித்துள்ளதாக விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

இந்த நிலையில், இவ்வாறான சொத்துக்களைக் கொள்வனவு செய்வதற்கு அவர்களுக்கு எவ்வாறு பணம் கிடைத்தது, அவர்களும் சந்தேக நபர்களுடன் தொடர்புப்பட்டுள்ளனரா என்பது குறித்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முச்சக்கர வண்டி சாரதியான பிரதான சந்தேக நபர், நிதி கொடுக்கல் வாங்கல்களிலும் மோசடிகளைச் செய்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதற்கமைய, தடுத்துவைக்கப்பட்டுள்ள உறவினர்களும் பல சம்பவங்களுடன் தொடர்புப்பட்டிருக்கலாம் என்ற கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.