;
Athirady Tamil News

மேலதிக வகுப்பெடுத்த இரு ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை!

0

நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைக் கருத்திற்கொண்டு வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமைகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கி மேலதிக வகுப்புகளை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று (25) ஹட்டனின் ஹிஜிராபுர பகுதியில் குறைந்தபட்ச வசதிகள் கொண்ட ஓர் இடத்தில், ஹட்டனில் இயங்கும் தமிழ்ப் பாடசாலை ஒன்றின் இரண்டு ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்தி வருவதாக அப்பகுதி மக்கள் ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

ஹட்டன் பொலிஸாருக்கு தகவல்
அந்த தகவலின் பேரில், தலைமையக பொலிஸ் ஆய்வாளர் அந்த இடத்திற்குச் சென்று இரண்டு ஆசிரியர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வகுப்பில் பங்கேற்ற பாடசாலை மாணவர்களை வீட்டிற்கு அனுப்ப தலைமையக பொலிஸ் ஆய்வாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதேவேளை, எரிபொருள் நெருக்கடி காரணமாக மறு அறிவித்தல் வரும் வரை அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது மேலும் தனியார் வகுப்பு நடத்துவதற்கு தடை விதித்துத்துள்ளனர்.

இந்தத் தீர்மானம் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் பொருந்தும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.