ராஜபக்ஷ குடும்பத்திற்கு அடுத்த சிக்கல் ; முக்கிய நபரை கைது செய்ய உத்தரவு
முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் இளைய புதல்வர் ஷமீந்திர ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கின் மூன்றாவது சந்தேக நபராக சமல் ராஜபக்ஷவின் இளைய மகனான ஷமீந்திர ராஜபக்ஷவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பிடியானை
சந்தேக நபரான ஷமீந்திர ராஜபக்ஷவை தற்போது அமெரிக்காவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கான சர்வதேச சிவப்பு பிடியானையை பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த கால அரசாங்கத்தின் போது ரஷ்யாவிடமிருந்து போர் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாக கூறப்படும் பல மில்லியன் டொலர் நிதி மோசடி தொடர்பில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.