பேராதனை பல்கலைகழகத்தில் 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி எட்டு பேர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குளவி கொட்டுதலால் பாதிக்கப்பட்டவர்களில் ஆறு மாணவர்களும் இரண்டு ஊழியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்னால் உள்ள சந்திக்கு அருகிலுள்ள பால் பண்ணைக்கு அருகில் குளவி கொட்டு தாக்குதல் நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அப்பகுதியில் உள்ள குளவி கூடுகளை அகற்ற பல்கலைக்கழக நிர்வாகம் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.