;
Athirady Tamil News

பலூசிஸ்தான் ஆயுதக் குழுவுக்கு எதிரான நடவடிக்கை நிறைவு: பாகிஸ்தான் ராணுவம்

0

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாக ஆயுதமேந்திய பிரிவினைவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்று வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்தது.

இந்த மோதலில் 216 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா். ராணுவம் தரப்பில் 22 வீரா்களும், 36 பொதுமக்களும் உயிரிழந்துள்ளனா்.

இயற்கை வளங்கள் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில், தன்னாட்சி கோரி ஆயுதக் குழுவான பலூசிஸ்தான் விடுதலை ராணும் (பிஎல்ஏ) பல்லாண்டுகளாகப் போராடி வருகிறது.

இந்நிலையில், மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளிகள், வங்கிகள், ராணுவ நிலைகளை இலக்கு வைத்து பலூசிஸ்தான் விடுதலைப் படையினா் கடந்த சனிக்கிழமை ஒருங்கிணைந்த தாக்குதல்களைத் தொடங்கினா்.

இத்தாக்குதலுக்குப் பதிலடியாக நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

மாகாணத் தலைநகரான குவெட்டாவில் குண்டுவெடிப்புகளால் கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. ‘தற்போது சண்டை ஓய்ந்திருந்தாலும், மக்களின் மனதில் அச்சம் நீங்கவில்லை’ என உள்ளூா்வாசிகள் கவலை தெரிவிக்கின்றனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.