;
Athirady Tamil News

ரஷியா – உக்ரைன் போரில் 55,000 வீரர்கள் பலி: ஸெலென்ஸ்கி

0

ரஷியாவுடனான போரில் சுமார் 55,000 உக்ரைன் வீரர்கள் பலியானதாக வொலோதிமீர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.

ரஷியா – உக்ரைன் இடையிலான போர் தொடங்கி, சுமார் 4 ஆண்டுகளான நிலையில், இந்தப் போரில் 55,000 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கிடையேயான போரை நிறுத்துமாறு உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும்நிலையில், போர் நிறுத்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

2022 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் போரில், இரு தரப்பிலும் சுமார் 5 லட்சம் பேர் பலியானதாகவும், சுமார் 15 லட்சம் பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

2025 பிப்ரவரி மாதத்தில் சுமார் 46,000-க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் பலியானதாக ஸெலென்ஸ்கி கூறியிருந்தார்.

இருப்பினும், இந்தப் போரில் ரஷியாவின் தரப்பில் 3.25 லட்சம் பேரும், உக்ரைன் தரப்பில் 1.4 லட்சம் பேரும் பலியாகியிருக்கலாம் என்று சர்வதேச ஆய்வுகள் மையத்தின் அறிக்கை கூறுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.