;
Athirady Tamil News

நடுகடலில் விபத்துக்குள்ளான படகு ; குழந்தைகள் உட்பட 53 அகதிகள் மாயம்

0

லிபிய கடற்பகுதியில் அகதிகள் பயணித்த விசைப்படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 2 பச்சிளம் குழந்தைகள் உள்பட 53 போ் கடலில் மூழ்கி மாயமாகியுள்ளனா்.

ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பாவுக்குச் சட்டவிரோதமாகச் செல்ல முயன்ற 55 போ் அந்தப் படகில் இருந்தனா்.

கரையை விட்டுப் புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே படகு கடலில் மூழ்கியதாக ஐ.நா.வின் சா்வதேச புலம்பெயா் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தக் கோர விபத்தில் நைஜீரியாவைச் சோ்ந்த 2 பெண்கள் மட்டுமே உயிா் பிழைத்துள்ளனா். அதில் ஒரு பெண் தனது கணவரையும், மற்றொரு பெண் தனது இரண்டு குழந்தைகளையும் பறிகொடுத்துள்ளாா்.

நடப்பு ஆண்டில் மட்டும் மத்திய தரைக்கடல் பகுதியில் உயிரிழந்த அகதிகளின் எண்ணிக்கை 484-ஆக அதிகரித்துள்ளது.

சட்டவிரோத ஆள் கடத்தல் கும்பல்கள் லாபத்துக்காக, பாதுகாப்பற்ற ரப்பா் படகுகளில் அதிகப்படியான மக்களை ஏற்றிச் செல்வதே இத்தகைய விபத்துகளுக்கு முக்கியக் காரணமாகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.