;
Athirady Tamil News

பெரும் ஆபத்தாக மாறும் இலங்கையின் நீர் நிலைகள் ; மக்களே அவதானம்

0

நீர் விபத்துக்கள் காரணமாக இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 24 நபர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அவ்விபத்துக்கள் அதிகமாக இடம்பெறும் பிரதேசங்களை இலக்காகக் கொண்டு உயிர்காக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. வூட்லர் தெரிவித்தார்.

சிறுவர்கள் குறித்து அவதானம்
கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

மேலும் சுற்றுலா செல்லும் தருணங்களில் சிவப்பு கொடிகள் பறக்க விடப்பட்டுள்ள இடங்கள் தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மது போதையில் இருக்கும் போது நீச்சல் செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அதேபோன்று நீர் நிலைகளுக்கு செல்லும் போது பெற்றோர் சிறுவர்கள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.