;
Athirady Tamil News

கணினி செயலிழப்பால் கடவுச்சீட்டு வழங்கல் பாதிப்பு

0

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடவுச்சீட்டுகள் மற்றும் விசாக்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

அமைப்பு மீட்டெடுக்கப்பட்டவுடன் கடவுச்சீட்டுகள் மற்றும் விசாக்கள் வழங்குவது உடனடியாக மீண்டும் தொடங்கும் என்று திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

அதன்படி, தொழில்நுட்பக் கோளாரை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் தகவலுக்கு, பொதுமக்கள் 011 210 1540 / 011 210 1545 என்ற தொலைபேசி எண்கள் மூலம் திணைக்களத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அல்லது திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.