இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசனும் இணைந்து நடாத்திய மஹா சிவராத்திரி விழா.
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசனும் இணைந்து நடாத்திய மஹா சிவராத்திரி விழா.
மேஜர் டிலான் ஷஹி
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசனும் இணைந்து நடாத்திய மஹா சிவராத்திரி விழா சனிக்கிழமை (14) அம்மன் மகளீர் இல்ல மண்டபத்தில் இடம்பெற்றது.
மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேசசெயலகத்திட்குட்பட்ட 16 அறநெறிபாடசாலை மாணவர்கள் மற்றும் அம்மன் மகளீர் இல்ல அறநெறி மாணவர்கள் உட்பட 150 மாணவர்கள் பங்குபற்றிய மகாசிவராத்திரி விழாவில் இந்துசமயத்தின் பண்பாடு கலாசாரங்களை பறை சாற்றும் வகையில் மாணவர்களுக்கிடையே போட்டி நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
பூமாலை கட்டுதல்,
பூச்சரம் தொடுத்தல்,
தோரணம் கட்டுதல்,
நிறைகுடம் வைத்தல்,
கோலம் போடுதல்,
களியால் சிவலிங்கம் பிடித்தல், ஆகிய போட்டி நிகழ்வுகள் நடாத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ் ஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளர் ஆ.தர்மதாச அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜ் வே.வாமதேவன் தலைவர் அம்மன் மகளீர் இல்லம் மற்றும்
திருமதி சர்மிளா பிரசாத் இந்துகலாசார உத்தியோகத்தர் ஆலையடிவேம்பு மற்றும் அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என்பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
