பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அனுர அஞ்சலி
மறைந்த லங்கா சம சமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் சிரேஷ்ட அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.
பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடல் வைக்கப்பட்டிருக்கும் என்.எம். பெரேரா நிலையத்திற்கு நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்.
இதன்போது ஜனாதிபதி பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.