;
Athirady Tamil News

25 இந்திய மீனவர்கள் இரு படகுகளுடன் கைது

0
காங்கேசன்துறை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
காங்கேசந்துறை கடற்படையினர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு மேற்கொண்ட விசேட சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது , காங்கேசன்துறை கடற்பரப்பை அண்டிய பகுதிக்குள் இரு படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த படகோட்டிகள் உள்ளிட்ட 25 தொழிலாளர்களையும் கடற்படையினர் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 25 பேரையும் அவர்களின் படகுகளையும் கரைக்கு கொண்டு வந்த கடற்படையினர் , மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்
You might also like

Leave A Reply

Your email address will not be published.