;
Athirady Tamil News

தீயணைப்பு பிரிவில் பெண்கள் ; வெளியான முக்கிய அறிவித்தல்

0

தீயணைப்பு பிரிவில் பெண்களை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் தலைமை தீயணைப்பு அதிகாரி பி.டி.கே.ஏ வில்சன் இதனைத் தெரிவித்துள்ளார்.

தீயணைப்பு பிரிவில் பெண்களின் தேவை அதிகரித்துள்ளமையால், இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பெண்கள் ஆட்சேர்ப்பு
தீயணைப்புச் சேவையில் பெண்களை இணைத்துக் கொள்வதற்காக சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், இதுவரை செயற்படுத்தப்படவில்லை எனவும் தீயணைப்பு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

பெண்களை ஆட்சேர்ப்பு செய்யும் போது, முதல் கட்டமாக மேல் மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் உள்ள எட்டு தீயணைப்பு பிரிவுகளுக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொழும்பு மாநகர சபை தீயணைப்புத் துறைக்கு முன்னோடித் திட்டமாக பெண் அதிகாரிகளை நியமிக்க முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தலைமை தீயணைப்பு அதிகாரி பி.டி.கே.ஏ. வில்சன் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.