;
Athirady Tamil News

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள் ; இரு சாரதிகளுக்கும் நடந்தேறிய துயரம்

0

அநுராதபுரம் – கல்கிரியாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உல்பத்தகம – உதுரவ வீதியில் காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் கல்கிரியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 18 மற்றும் 70 வயதுடையவர்கள் எனவும் கல்கிரியாகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.