;
Athirady Tamil News

அனுமதி இல்லாமல் செல்லும் கப்பல்கள் அழிக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை

0

தெஹ்ரான்

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து 6 வாரங்களாக நடந்த தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்தது.

இந்நிலையில், ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் விதித்திருந்த காலக்கெடு நேற்றிரவு 8 மணியுடன் முடிவுக்கு வந்தது. இந்த சூழலில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே 2 வார காலத்திற்கு போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்து செல்லும் கப்பல்கள் ஈரானின் கடற்படையிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். அனுமதி இல்லாமல் செல்லும் கப்பல்கள் தாக்கி அழிக்கப்படும் என ஈரான் எச்சரித்து உள்ளது என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது.

முற்றிலும், உடனடியாக மற்றும் பாதுகாப்பான முறையில் ஹார்மூஸ் ஜலசந்தி திறக்கப்பட வேண்டும். அப்படி திறக்கப்பட்டால் மட்டுமே, ஈரான் மீது 2 வார காலத்திற்கு தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்று டிரம்ப் கூறியிருந்த நிலையில், ஈரான் இதனை தெரிவித்து உள்ளது.

ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் நிறைய கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. எனினும், அந்த பகுதியில் செல்வாக்கை செலுத்த ஈரான் விரும்புகிறது. பாரசீக வளைகுடா பகுதியின் மேலே போர் விமானங்களும் உள்ளன. இதற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் கப்பல் ஊழியர்கள் வெளியிட்டு உள்ளனர் என்று அந்த தகவல் தெரிவிக்கின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.