;
Athirady Tamil News

Air France விமான பயணத்தில் உயிரிழந்த குழந்தை

0

கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை, Air France நிறுவனத்தின் நைரோபி–பரிஸ் (Nairobi-Paris) விமானப் பயணத்தின் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிகிச்சைக்காக பிரான்ஸுக்கு கொண்டு வரப்பட்டிருந்த இந்த குழந்தை, நேற்று காலை, Nairobi இலிருந்து Paris நோக்கி புறப்பட்ட விமானத்தில் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் விமான குழு நடைமுறைக்கு ஏற்ப Samu de Paris அவசர சேவையை தொடர்பு கொண்டதுடன், விமானத்தில் இருந்த மருத்துவர்களும் உடனடியாக உதவ முனைந்தனர். எனினும், அவர்களின் முயற்சிகள் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியவில்லை என கூறப்படுகின்றது.

குறித்த விமானம் இன்று Paris-Charles-de-Gaulle விமான நிலையத்தில் தரையிறங்கியதாக கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.