;
Athirady Tamil News

ஈரான் மீது அதிரடி தாக்குதல் நடத்திய அமெரிக்கா

0

தெஹ்ரான்,

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

அதேவேளை, அமெரிக்காவுடனான மோதலை தொடர்ந்து ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதையடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. மோதலை குறைக்க அமெரிக்கா, ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இதனிடையே, அமைதி பேச்சுவார்த்தைக்கு மத்தியில் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது. அதன்படி, தற்காப்பு நடவடிக்கை எனக்கூறி ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

இந்த மோதலின்போது நேற்று ஹர்முஸ் ஜலசந்தி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஈரான் மீது தாக்குதல்
இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் பண்டர் அப்பாஸ், சிரிக், மினப், குவாசம் தீவு, கொர்ஜன் ஆகிய நகாங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரானின் வான்பாதுகாப்பு அமைப்பு, ஏவுகணை ஏவுதளம், ஆயுத சேமிப்பு கிடங்கு உள்பட ராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு ஏற்பட்டதா? என்பது குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.