வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மீட்பு
கட்டானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹயாயவத்தை மயானத்திற்கு அருகிலுள்ள உட்பாதை ஒன்றில் புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும் அதற்கான 4 தோட்டாக்களும் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
நீர்கொழும்பு பிராந்திய குற்றப்புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்கள் குழுவொன்றினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த ஆயுதம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கைத்துப்பாக்கி ஏதேனும் குற்றச் செயலை மேற்கொள்ளும் நோக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததா என்பது தொடர்பில் கட்டானை பொலிஸாரும் நீர்கொழும்பு பிராந்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.