இலங்கைக்குள் நுழையும் மற்றுமொரு ஈரானிய கப்பல்; சபையில் சலசலப்பு
இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று 05 விசேட கூற்று ஒன்றை விடுத்து உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார்.
முன்னதாக ஈரானிய போர்க்கப்பல் இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் தாக்கப்பட்டதாக அமெரிக்கா உறுதிப்படுத்துகின்ற நிலையில், அவ்வாறொன்று இடம்பெறவில்லை என இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவிக்கின்றது.
ஆகையினால் குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார். .
இதேவேளை மற்றுமொரு ஈரானிய கப்பல் இலங்கை கடல்பரப்பிற்குள் பிரவேசித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ , இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது இலங்கையின் கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்திலேயே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.