;
Athirady Tamil News

இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு வேலை இழக்கும் அபாயத்தில் பலர்

0

இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு (2027 ) தொடக்கத்திற்குள் மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் சமரச சேவை நிறுவனமான ஏகாஸ் (Acas) 1,000 வணிக நிறுவனங்களிடம் நடத்திய ஒரு கணக்கெடுப்பில், சிறிய நிறுவனங்களைக் காட்டிலும் பெரிய நிறுவனங்களே ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய அதிக வாய்ப்புள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவித்த ஏகாஸ் நிறுவனத்தின் பணிப்பாளரான கெவின் ரோவன் (Kevin Rowan), எங்கள் கருத்துக் கணிப்பின் முடிவுகள், மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் அடுத்த ஆண்டின் தொடக்கத்திற்குள் ஆட்குறைப்பு குறித்து பரிசீலித்து வருவதை வெளிப்படுத்துகின்றன.

நிறுவனங்கள் முதலில் ஆட்குறைப்புக்கு மாற்றாக சாத்தியமான அனைத்து வழிகளையும் ஆராய வேண்டும். ஆட்குறைப்பு மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் நிறுவனங்கள் சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும், ஊழியர்களின் கருத்துக்களைக் கேட்பதற்காக அவர்களுடன் முன்கூட்டியே கலந்தாலோசிக்க வேண்டும்.

இல்லையெனில் நிறுவனங்கள் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.