மீண்டும் ஏவுகணை சோதனையில் வடகொரியா
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் போர் கப்பல்களை தாக்கி அழிக்கும் கப்பல் ஏவுகணை சோதனையை மேற்பார்வை செய்ததாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனமான யோன்ஹாப் தெரிவித்தது.
வடகொரியாவின் நம்போ துறைமுக நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இருந்து கடலில் இருந்து தரையில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை கிம் மேற்பார்வையிட்டதாக வட கொரியாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
“கடல் பாதுகாப்பின் புதிய சின்னம்”
நேற்று முன்தினம் (04) (புதன்கிழமை) கடலில் இருந்து தரைக்கு ஏவுகணைகளை ஏவுவதை கிம் மேற்பார்வையிட்டார். மேலும் இந்த சோதனையை புதிய போர்க்கப்பலின் திறன்களின் “முக்கிய” அங்கமாக மதிப்பிட்டார், இது தனது நாட்டிற்கான “கடல் பாதுகாப்பின் புதிய சின்னம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசும் போது, “இந்த வெற்றிகள் அனைத்தும் நமது கடல்சார் இறையாண்மையைப் பாதுகாப்பதில் ஒரு தீவிர மாற்றத்தை உருவாக்குகின்றன, இவற்றை அரை நூற்றாண்டு காலமாக நாம் அடையாத ஒன்று,” என்று தெரிவித்தார்.