உணவகங்கள் வீதியோர கடைகள் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு
நோன்பு காலத்தினை முன்னிட்டு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுகாதாரமான உணவு அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வதற்காக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே .மதன் தலைமையில் தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றது.
இந்த பரிசோதனைகளின் போது உணவுப் பொருட்களின் தரம், சேமிப்பு முறை சுற்றுப்புறத் தூய்மை, பணியாளர்களின் தனிநபர் சுகாதாரம் உள்ளிட்ட அம்சங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
கடந்த காலங்களிலும் இவ்வாறான விசேட சோதனை நடவடிக்கை சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
இது தவிர மனித பாவனைக்கு உதவாத தரமற்ற பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக அதிகபட்ச நடவடிக்கை எடுப்பதற்கு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
