;
Athirady Tamil News

இஸ்ரேல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஈரான் தாக்குதல்

0

ஈரானிய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலில் உள்ள ஹைஃபா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் சேதமடைந்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று (19) இஸ்ரேலின் வடக்குப் பகுதியிலுள்ள ஹைஃபா நகரின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பல இடங்களை இலக்கு வைத்து ஈரானிய ஏவுகணைகள் தாக்கியுள்ளன.

இதனால் பெரும் தீ விபத்துக்கள் ஏற்பட்டதுடன், அருகிலுள்ள கிரயோட் புறநகர்ப் பகுதிகள் முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினத்தில் மாத்திரம் இஸ்ரேலை இலக்கு வைத்து ஈரான் நடத்திய ஒன்பதாவது ஏவுகணைத் தாக்குதல் என இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.