;
Athirady Tamil News

கட்டார் கடல் எல்லைக்கு அருகே கப்பல் மீது சீறி வந்து விழுந்த ஏவுகணை; உலக நாடுகள் அச்சம்!

0

இஸ்ரேல் – போர் பதற்றத்துக்கு மத்தியில் கத்தாரின் ராஸ் லஃப்பான் பகுதிக்கு அருகே நடுக்கடலில் பயணித்துக் கொண்டிருந்த கப்பல் ஒன்றின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு (UKMTO) தெரிவித்துள்ளது.

ராஸ் லஃப்பானுக்கு கிழக்கே சுமார் 4 கடல் மைல் தொலைவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.

அடையாளம் தெரியாத ஏவுகணை அல்லது மர்மப் பொருள்
அடையாளம் தெரியாத ஏவுகணை அல்லது மர்மப் பொருள் ஒன்று கப்பலின் மீது மோதித் தாக்கியுள்ளதாக UKMTO தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் இருந்த அனைத்துப் பணியாளர்களும் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதியில் பயணிக்கும் ஏனைய கப்பல்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் காணப்பட்டால் உடனடியாக அறிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து சர்வதேச கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை ஹோர்முஸ் நீரிணை மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், எரிசக்தி ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கட்டார் கடல் எல்லைக்கு அருகே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.