;
Athirady Tamil News

யாழில். தான் வேலை செய்த வீட்டில் கைவரிசை காட்டிய பணிப்பெண் – 14 பவுண் நகையுடன் கைது

0
யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்த பெண் குறித்த வீட்டில் நகைகளை களவாடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , களவாடப்பட்ட நகைகளையும் அப்பெண்ணிடம் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர். 
யாழ். நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் கணவன் – மனைவி இருவரும் வேலைக்கு செல்வதனால் , வீட்டு வேலைக்கு என 54 வயதுடைய பெண்ணொருவரை பணிக்கு அமர்த்தியுள்ளனர்.
அந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்த 14 பவுண் நகை காணாமல் போயுள்ளது. அதனை அடுத்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தம்பதியினர் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , நேற்றைய தினம் வியாழக்கிழமை குறித்த வீட்டின் பணிப்பெண்ணை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குறித்த வீட்டில் இருந்து களவாடப்பட்ட 14 பவுண் நகைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
அதேவேளை , குறித்த பெண் முன்னர் தான் பணியாற்றிய வீட்டிலும் நகைகளை களவாடியதை விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.
குறித்த பணிப்பெண்ணை பொலிஸார் தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.