யாழ்ப்பாணத்தில் அதீத போதையில் வீதியில் படுத்துறங்கியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதுடன் , மோட்டார் சைக்கிள் ஓட்டி படுகாயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
கோப்பாய் பகுதியை சேர்ந்த 56 வயதுடைய நபரே அவ்வாறு உயிரிழந்துள்ளார்
அதிக போதையில் வீடு நோக்கி நேற்று முன்தினம் இரவு வேளை சென்று கொண்டிருந்தவர் , போதையில் வீட்டுக்கு சற்று தொலைவில் பருத்தித்துறை – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் படுத்துறங்கியுள்ளார்.
அவ்வேளை வீதியில் வந்த மோட்டார் சைக்கிள் , வீதியில் படுத்திருந்தவருடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் , அவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஓட்டி படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.