;
Athirady Tamil News

ஈரான் மீது 10 நாட்களுக்கு தாக்குதல் நடத்தப்படாது: டிரம்ப் அறிவிப்பு

0

வாஷிங்டன்,

வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் போர் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே இதை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருமாறு சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பாகிஸ்தான் மற்றும் எகிப்து நாடுக ளின் மத்தியஸ்தத்தின் பேரில் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருவ தாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து உள்ளார்.

இதற்காக 15 அம்ச திட்டத்தை அமெரிக்கா வகுத்தது. ஈரானுக்கு எதிரான பொருளாதார தடை நீக்கம், ஈரானின் அணுசக்தித் திட்டத்தை கைவிடு தல், ஏவுகணைகள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் ஹார்முஸ் நீரி ணையை மீண்டும் திறத்தல், ஆயுதக்குழுக்களுக்கு ஈரான் வழங்கி வரும் ஆதரவை நிறுத்துதல் போன்றவை முக்கியமாக இடம்பெற்று உள்ளன.

ஆனால் அமைதி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என நிராகரித்த ஈரான், அமெரிக்காவின் இந்த 15 அம்ச திட்டத்தையும் நிராகரித்தது. ஆனால் ஈரான் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக டிரம்ப் கூறி வருகிறார். இந்த நிலையில், தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், வரும் ஏப்ரல் 06 ஆம் தேதி வரை ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று கூறியுள்ளார். ஈரான் கோரிக்கையை ஏற்று இந்த போர் நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும், பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், டிரம்ப் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.