ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து சரத் கணேகொட விலகியுள்ளார். இந்த பதவி விலகல் 31 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறைசேரியின் செயலாளரினால் புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்படும் வரை, ஏ.கே.டி.டி. திமல் அரந்தர பதில் தலைவராகச் செயற்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் லிமிடெட் மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் பணிப்பாளர் சபையிலிருந்து அதன் பணிப்பாளர் ரோஹன் குணதிலக்கவும் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.