;
Athirady Tamil News

மன்னார் வீதியில் சிதறிக்கிடந்த மனித உடல் பாகங்கள் ; இழுத்துச் செல்லும் நாய்கள்

0

மன்னார் சவுத்பார் பகுதியில் அமைந்துள்ள தனியார் மனித உடல் பதப்படுத்தும் (Embalming) நிலையத்தில், மனித உடல் பாகங்கள் முறையற்ற விதத்தில் அகற்றப்பட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் சுகாதாரச் சீர்கேடும் அச்சமும் நிலவி வருகின்றது.

இன்று குறித்த நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வீதிகளில் மனித உடல் பாகங்கள் சிதறிக்கிடந்ததோடு, அவற்றை நாய்கள் இழுத்துச் சென்றுள்ளது.

நீண்டகாலமாகவே இந்த நிறுவனம் மனித எச்சங்களைச் சரியான முறையில் அப்புறப்படுத்தாமல், மக்கள் நடமாடும் பகுதிகளுக்கு அருகிலேயே வீசி வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில் இன்றையதினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.​

இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இது குறித்துப் அப்பகுதி மக்கள் கருத்துத் தெரிவிக்கையில், “இங்குள்ள இராணுவ முகாம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் இந்தச் செயற்பாடுகள் அமைகின்றன.

அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திச் சிலர் இவ்வாறான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர்” எனத் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே மன்னார் பொலிஸார் மற்றும் நகரசபை ஆகியவற்றுக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இந்த மனிதநேயமற்ற மற்றும் சட்டவிரோதச் செயற்பாட்டைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் உடனடியாக முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.​

தவறும் பட்சத்தில், குறித்த நிறுவனத்தின் அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்து, அதனை உடனடியாக அந்த இடத்திலிருந்து அகற்ற வேண்டும் எனப் பிரதேச மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.