;
Athirady Tamil News

மஹரகம வீடு தீப்பிடித்து மூவர் உயிரிழப்பு ; வீட்டின் உரிமையாளர் தீ வைத்தாரா?

0

கொழும்பு மஹரகமவில் 2 மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்த தகவல் வெளியாகியுள்ளது. வீட்டின் மேல் மாடிக்கு, வீட்டின் உரிமையாளர் கடந்த 18ஆம் திகதி இரவு தீ வைத்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும், தீ வைத்த வீட்டின் உரிமையாளரும் உயிரிழந்துள்ளனர் .

சம்பவத்தில் பாதிக்கபப்ட்ட சிறுமியின் தந்தை களுபோவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் சிகிச்சை பெற்று வருகிறார்

சம்பவ இடத்தில் பெட்ரோல் வாடை
சம்பவ இடத்தில் பெட்ரோல் வாடை வீசியுள்ளதாக தெரிவித்த பொலிஸார், வீட்டின் உரிமையாளர் மேல் மாடிக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகவும், இதன்போது அவரும் தீ விபத்தில் சிக்கியுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த வீட்டின் மேல் மாடியில் வாடகைக்கு வசித்து வந்தவர்களுக்கும், வீட்டின் உரிமையாளருக்கும் இடையில் அடிக்கடி தகராறுகள் இடம்பெற்று வந்துள்ளதாகவும், அதன் விளைவாகவே தீவைத்திருக்கலாம் எனவும்சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.