;
Athirady Tamil News

90 நிமிடங்களுக்குள் தூங்கி 14,000 அமெரிக்க டொலர் பரிசு பெற்ற நபர்

0

ஜப்பானின் டோக்கியோ நகரில், நன்றாகத் தூங்குபவருக்கு பணப்பரிசு வழங்கும் வித்தியாசமான போட்டியொன்று நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் போட்டியில், 90 நிமிடங்களுக்குள் விரைவாகத் தூங்கி, சிறந்த மற்றும் ஆழமான உறக்கத்தைப் பெற்ற போட்டியாளருக்கு 14,000 அமெரிக்க டொலர்கள் (இலங்கை மதிப்பில் 40 இலட்சம் ரூபாய்க்கும் அதிகம்) பெரும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

போட்டியாளர்களின் உறக்கத்தின் ஆழம், தரம் மற்றும் சீரான தன்மையைத் துல்லியமாகக் கண்காணிப்பதற்காக விசேட உறக்கக் கண்காணிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.