;
Athirady Tamil News

புதிய 75 எரிபொருள் நிலையங்கள்; ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

0

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் புதிதாக 75 எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சி மாநாட்டில் உரையாற்றியபோதே ஜனாதிபதி அநுரகுமார இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது ஜனாதிபதி மேலும் கூறுகையில்,

புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைப்பதற்கான இடங்கள்
தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்களை அதிகளவில் சார்ந்துள்ள பகுதிகளில், புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைப்பதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

களஞ்சியங்களில் எரிபொருள் கையிருப்பில் இருந்தும், சில தனியார் நிறுவனங்கள் அதன் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனத் தெரிவித்த ஜனாதிபதி, தனியார் நிறுவனங்கள் இலங்கையின் எரிபொருள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம் போட்டியை ஊக்குவிப்பதே எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சில தனியார் நிறுவனங்களால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலைகளுக்கு இணையாக எரிபொருளை விற்பனை செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.