;
Athirady Tamil News

இரு முச்சக்கர வண்டிகளுக்கு ஒரே இலக்கம்!

0

ஒரே இலக்க தகடுகள் கொண்ட இரண்டு முச்சக்கர வண்டிகளை நுவரெலியா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு முச்சக்கர வண்டிகளும் நுவரெலியாவின் ராகலை மற்றும் சாந்திபுரப் பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இரண்டு முச்சக்கரவண்டிகளின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் ,கைதான இருவரும் உறவினர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளின் ஒன்று, வாடகைக்கு ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும் மற்றொன்று மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

பறிமுதல் செய்யப்பட்ட முச்சக்கரவண்டிகள் ஏதேனும் குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதா? என்பது தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.