இலங்கைத் அஞ்சல் திணைக்களத்தில் காணாமல் போன 6 இலட்சம் டொலர்
இலங்கைத் அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்கத்அஞ்சல் சேவைக்கு வழங்கப்பட்ட பணத்தில் மேலும் 600,000 அமெரிக்க டொலர் காணாமல் போனமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தமக்குரிய கொடுப்பனவு கிடைக்கவில்லை என அமெரிக்கத் அஞ்சல் சேவை விடுத்த முறைப்பாட்டினைத் தொடர்ந்தே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறினார்.
அதேவேளை திறைசேரியில் இருந்து பெருமளவு பணம் ஹேக்கர்களால் களவாடப்பட்டுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது .