;
Athirady Tamil News

இந்திய விமானங்களுக்கு தடையை நீட்டித்தது பாகிஸ்தான்

0

இந்திய விமானங்கள் தங்கள் நாட்டு வான் பரப்பை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை பாகிஸ்தான் மேலும் ஒரு மாதம் நீட்டித்தது.

கடந்த 2025, ஏப்ரல் 24-இல் இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் விதித்த தடை இப்போது வரை தொடா்கிறது.

கடந்த ஆண்டு பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க இந்தியா நடவடிக்கை எடுப்பதை அறிந்த பாகிஸ்தான், இந்திய விமானங்கள் தங்கள் வான் பரப்பை பயன்படுத்த தடை விதித்தது. இதையடுத்து, இந்தியாவும் தங்கள் வான் பரப்பை பயன்படுத்த பாகிஸ்தானுக்கு தடை விதித்தது.

பாகிஸ்தான் விதித்த இந்தத் தடையால் ஜரோப்பா, வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் இந்திய பயணிகள் விமானங்கள் மாற்றுப் பாதையில் செல்வதால் கூடுதல் செலவு ஏற்பட்டு வருகிறது.

தடை நீட்டிப்பு தொடா்பாக பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட செய்தியில், ‘இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட, குத்தகைக்கு விடப்பட்ட பயணிகள் மற்றும் ராணுவ விமானங்களுக்கான தடை 2026 ஜூலை 24 காலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.