கோட்டாபயவின் முன்னாள் செயலாளர் அதிரடி கைது!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசாங்க சம்பளம்
கோட்டாபய ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் அவரின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சுகீஸ்வர இரண்டு அரசாங்க நிறுவனங்களிடமிருந்து சம்பளம் பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதன்படி, சம்பவம் குறித்த விசாரணை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.